காதலுக்கு ஏது வயது? 96 வயது காதலியை மணக்க தயாராகும் 100 வயதான காதலர்!

காதலுக்கு வயது இல்லை என்பது போல, 100 வயது நிரம்பிய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் தனது 96 வயது காதலியான ஸ்வெர்லினை திருமணம் செய்யவுள்ளார். அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய 100 வயதான ஹரோல்ட்…

காதலுக்கு வயது இல்லை என்பது போல, 100 வயது நிரம்பிய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் தனது 96 வயது காதலியான ஸ்வெர்லினை திருமணம் செய்யவுள்ளார்.

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ், தனது காதலியான 96 வயதான ஜீன் ஸ்வெர்லினை வரும் ஜூன் மாதம் திருமணம் செய்ய உள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டுக்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கிய கடற்கரையில் ஹரோல்ட் மற்றும் ஜீனின் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஹரோல்ட் மற்றும் ஜீன் ஸ்வெர்லினின் காதல் கதை 2021ல் தொடங்கியுள்ளது. ஜீன் ஸ்வெர்லின் உண்மையில் தனது வாழ்க்கையில் ஒரு சிறப்புப் பாத்திரம் என்றும்,  அவளை முழு மனதுடன் விரும்புவதாகவும் ஹரோல்ட் கூறினார். அதே போல், ஹரோல்டை முழு மனதுடன் காதலிப்பதாக ஜீன் தெரிவித்தார். இருவரும் அமெரிக்கர்கள், இருவரும் கணவன் மற்றும் மனைவியை இழந்தவர்கள்.

ஹரோல்ட் 1942ல் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார். ஹரோல்ட் முன்னாள் மனைவி தெல்மாவுடன் 70 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார்.மேலும் தெல்மா 2018 இல் இறந்தார். அதேபோல், 21 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜீன் ஸ்வெர்லின் தனது 40 வயதில் கணவரை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.