ஹீமோபீலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோய். இந்த குறைபாடு உள்ளவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால், ரத்தம் உறையாமல் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். உரிய சிகிச்சை இல்லாவிடில் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிடும்.
சாதாரணமாக நமது உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தம் கசிவது தானாக நின்றுவிடும். பெரிய காயமாக இருந்தால் அதற்கான சிகிச்சை செய்தால் நின்றுவிடும். ஆனால் ஹீமோபீலியா நோய் உள்ளவர்களுக்கு ரத்தம் உறையும் தன்மை இல்லாததால் தொடர்ந்து வெளியேறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். இது ஆண்களை மட்டுமே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நோயானது இரண்டு வகைகளில் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. ஒன்று மரபணு வழியாக வரும். மற்றொன்று, திசுக்கள் பிரிவதன் மூலமும் இந்த நோய் ஏற்படும். இதில் மைல்டு, மாடரேட், சிவியர் என 3 வகைகள் இருக்கிறது.
இதில் சிவியர் நிலையில் இருப்பவர்கள் வாரத்தில் 2 முறை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். இந்த நோயை பூரணமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர் சிகிக்சையின் மூலம் இரத்தம் உறையாமல் இருப்பதை கட்டுப்படுத்த முடியும்.
ரத்தம் உறையாமை நோயில் சிவியர் நிலையில் இருப்பவர்கள் ஜீன் தெரபி முறையில் சிசிச்சை எடுத்துக்கொண்டால் அவர்களை மைல்டு நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் பூரணமாக குணப்படுத்த முடியாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவித மருந்துகளையும் உபயோகிக்கக்கூடாது.







