H1N1 வைரஸ் காய்ச்சலுக்கு என்னென்ன அறிகுறிகள்?

H1N1 வைரஸ் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.   H1N1 அறிகுறிகள் தலைவலி, இரும்பல்,…

H1N1 வைரஸ் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 

H1N1 அறிகுறிகள் தலைவலி, இரும்பல், வாந்தி உடல் சோர்வு மற்றும் தசை வலி, வயிற்று போக்கு 10 நாட்களுக்கு காய்ச்சல் 100 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் H1N1 வைரஸ் 3 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.

• A – லேசான அறிகுறி ( லேசான காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி உடம்பு வலி, வயிற்று போக்கு) A அறிகுறிகள் இருப்பவர்களுக்கு influenza பரிசோதனை தேவை இல்லை. ஆனால்24 முதல் 48 மணி நேரம் வரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும், கூட்டமாக செல்லாமல் தனிமையில் இருக்க வேண்டும்.

• B – தீவிர அறிகுறிகள் ( அதிக காய்ச்சல், அதிகபடியான தொண்டை வலி, ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள்) 65 வயது, கர்ப்பிணி பெண்கள், தொற்று நோய் மற்றும் இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்கும் சோதனை தேவை இல்லை)

• C – இரண்டுக்கும் மேற்பட்ட தீவிரமான அறிகுறிகள் ( மூச்சு விடுவதில் சிரமம், எளிதில் எரிச்சல் அடைவது, குறைவான அளவில் சிறுநீர் கள்ளித்தல், உடனடி மருத்துவ பரிசோதனை தேவை. கட்டாயம் RTPCR சோதனை தேவை.

தமிழ்நாடு முழுவதும் H1N1 கண்டறிய பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு வயது குறைவான குழந்தைக்கு 3 மில்லி கிராம் OSELTAMIVIR என்ற மருந்து கொடுக்க வேண்டும்.. ஒரு நாளைக்கு இரண்டு டோஸ் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.