ரயில்களில் பொதுமக்கள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய விவரத்தை தற்போது பார்க்கலாம்…
ரயில்களில் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு செல்லக் கூடாது. காலி எரிவாயு சிலிண்டர்களை கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது. தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் பொதுமக்கள் ரயில்களில் எடுத்து செல்லக்கூடாது.
இதே போல பட்டாசுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை ரயில்களில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமிலங்கள் மற்றும் போதைப் பொருட்களையும் ரயில்களில் எடுத்துச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. ரயில்களில் புகை பிடிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.








