புஷ்பா படத்திற்காக தேசிய விருது: இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீபிரசாத்!

தேசிய விருது அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார். 2021 ஆம் ஆண்டிற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்ஸ்…

தேசிய விருது அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார்.

2021 ஆம் ஆண்டிற்காக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது, மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்ஸ் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது புஷ்பா திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘புஷ்பா படத்துக்காக தேவிஸ்ரீ பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய விருது அறிவிக்கப்பட்ட தேவிஸ்ரீ பிரசாத்துக்கு நேரிலும் சமூக வலைதளம் மூலமாகவும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டியோவிற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இன்று நேரில் சென்றார். அப்போது இளையராஜாவின் காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்து எனக்கு முன்மாதிரியாக இருந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.