சந்திரயான் 3: இஸ்ரோ நாளை சந்திக்க உள்ள சவால்கள் என்னென்ன? மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக பேட்டி!

லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்குவதும் அதன் பாதையை தீர்மானிப்பதும் இஸ்ரோவுக்கு முக்கிய சவாலாக இருக்கும் என சந்திராயன் 1-ன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.  நாளை மாலை…

லேண்டரை நிலவில் மெதுவாக தரையிறக்குவதும் அதன் பாதையை தீர்மானிப்பதும் இஸ்ரோவுக்கு முக்கிய சவாலாக இருக்கும் என சந்திராயன் 1-ன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். 

நாளை மாலை 6.04 மணி அளவில் சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில் இஸ்ரோவுக்கு முன் உள்ள சவால்கள் என்னென்ன என்று சந்திரயான் 1 திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நியூஸ் 7 தமிழ், செய்தியாளர் நெப்போலியனுக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார்.

அப்போது மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

நிலவில் எவ்வாறு தரையிறங்க வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன? நிலவை நோக்கி எந்த வேகத்தில் போகனும் எந்த இடத்திற்கு போகனும்? எந்த திசையில் போகனும்? என ஏற்கனவே திட்டமிட்டப்படி மெதுவாக, செங்குத்தாக தரையிறங்க வேண்டும்.

லேண்டரை தரையிரக்கும் போது எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக தரையிறக்க முயற்சிக்க வேண்டும். நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மாற்று திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

லேண்டர் தரையிறங்கும் இடம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று செல்லும் பாதையை தீர்மானிப்பதும் முக்கியம் என மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

மயில்சாமி அண்ணாதுரை நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த முழு பேட்டியை கீழே காணலாம்:

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.