“என்னடி சித்திரமே இங்க நீ பத்திரமே…” – ‘தலைவன் தலைவி’ பட முதல் பாடல் வெளியீடு!

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் முதல் பாடல் வெளியானது.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிதாக நடிக்கும்  திரைப்படம்  ‘தலைவன் தலைவி’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதில் கணவன், மனைவியாக விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் காட்சிபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு இடையேயான வார்த்தை போர், யோகி பாபு காமெடி காட்சி என அனைத்தும் ரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தலைவன் தலைவி திரைப்படத்தின் முதல் பாடலான பொட்டல முட்டாயே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாடலாக இருக்கும் இப்பாடலில்  “என்னடி சித்திரமே இங்க நீ பத்திரமே சொல்லு டி கட்டள எத்தன நான் செய்வேனே…” என்ற விவேக்கின் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் சுபலாஷினி பாடியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.