மேற்கு வங்கத்தில் 5ம் கட்ட வாக்குப்பதிவு 78 சதவிகிதத்துடன் நிறைவு!

மேற்கு வங்க மாநிலத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 78.36 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று…

மேற்கு வங்க மாநிலத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 78.36 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இதுவரை 4 கட்டங்களாக 135 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்திருந்த நிலையில், இன்று 45 தொகுதிகளுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

45 தொகுதிகளில் உள்ள 15,789 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 853 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நடந்த 4ம் கட்ட தேர்தலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது 48 மணி நேரத்திற்கு பதிலாக 72 நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.