திடீர் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், பல்வெறு திரை கலைஞர்களும், ரசிகர்களும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், விவேக்கும், தானும் ஒன்றாக பள்ளிக் கல்வி பயின்றதாகவும் ஆனால், இதுவரை இருவரும் சேர்ந்து ஒன்றாக நடித்ததில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு என்றும், இதனை மாற்ற இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க இருந்ததாகவும் ஆனால், இந்த ஆசை நிறைவெற்றுவதற்கு முன்னரே அவர் காலத்துடன் ஒன்றர கலந்துவிட்டார் எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க முடியாது என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், விவேக் போன்ற கலைஞர்களை வழியனுப்புவதன் மூலம், வேறொரு கலைஞன் மூலம் அவரை மீண்டும் நாம் எதிர்பார்க்க முடியும் என்று உருக்கமாக தனது இரங்கலை கமல் பதிவு செய்துள்ளார்.







