#WeatherUpdate | ஆந்திரா நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர…

#WeatherUpdate | Deep depression moving towards Andhra Pradesh... Where in Tamilnadu likely to rain today?

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. அது இன்று (டிச.19) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், நாளை மறுதினம் (டிச.21) நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, நகர்ந்து 23, 24-ம் தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன்காரணமாக இன்று (டிச.19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நாளை மிதமான மழையும், நாளை மறுதினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் மழை குறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வரும் 22ம் தேதி மீண்டும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், 23, 24-ந்தேதிகளில் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24-ம் தேதிக்கு பிறகு ஓரிரு நாட்கள் மழைக்கான வாய்ப்பு குறைந்து காணப்படும் என்றும், தொடர்ந்து 27-ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சூழல் நிலவுவாத கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.