#WeatherUpdate – அடுத்த மூன்று மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட…

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இம்முறை தமிழ்நாட்டில் சற்று அதிமாக பெய்திருந்தாலும், கடந்த மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மிகக் கடுமையாக உயர்ந்தது. இதனிடையே கடந்த பத்து நாட்களாக ஒருசில இடங்களில் மழை பெய்துவருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது  என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.