மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (அக். 2) நேரில் சென்று சந்தித்தார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செப்டம்பர் 25ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது , பாரதிய ஜனதா மற்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பாஜக கூட்டணி பிளவு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.இதனிடையே பாஜக மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் நாளை நடைபெறுவதாக இருந்தது. அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் அக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி மற்றும் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.






