”நாம் தமிழர் கட்சியை விட 30% அதிக வாக்குகள் வாங்குவோம்! சீமான் விடுத்த சவாலுக்கு தயார்!” – அண்ணாமலை பேட்டி

நாம் தமிழர் கட்சியை விட 30% அதிக வாக்குகள் வாங்குவோம், சீமான் விடுத்த சவாலுக்கு தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

நாம் தமிழர் கட்சியை விட 30% அதிக வாக்குகள் வாங்குவோம், சீமான் விடுத்த சவாலுக்கு தயார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை பாஜக வரவேற்கிறது. 1952,1957,1962,1967 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் நான்கு தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. 1967 க்கு பிறகு காங்கிரஸ் 105 முறை 356- பயன்படுத்தி ஆட்சியை கலைத்திருக்கிறார்கள் எனவும், அதன் பிறகு லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை  தேர்தல் மாறி போனதால் 1983ல் இந்திய தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

தேர்தல் பல்வேறு இடங்களில் நடப்பதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகள்
வருகிறது என கூறிய அண்ணாமலை, ஆண்டுக்கு சராசரியாக எட்டு முதல் ஒன்பது
மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அரசு கொள்கை முடிவு
எடுக்க முடியவில்லை, லட்சகணக்கான ஊழியர்களை ஆறு மாத காலத்திற்கு தேர்தலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அற்புதமான முன்னெடுப்பு.

2014-ல் முப்பதாயிரம் கோடி தேர்தலுக்கு செலவாகியது. தமிகழகத்தில் அதிமுக, தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளட்ட கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலை வரவேற்கிறார்கள். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதானி நிறுவனத்துற்கு ஆதரவு தர வேண்டும் என எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. அதானி, பிர்லா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

ஒரு தனியார் நிறுவனத்தின் மீது வெளியில் இருந்து போர் தொடுப்பதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும், அதானி என்ற பெயரில் இவர்கள் போர்தொடுப்பது இந்தியாவின் வளர்ச்சி மீதான போர்.

இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இணைந்து இன்று அதானி,  நாளை ரிலையன்ஸ் அதன் பிறகு பிர்லா, டாடா என இந்தியாவின் வளர்ச்சியை சீர்குழைக்க முயலும். தெரிவித்தவர், உலக நாடுகளின் பொறாமையை சம்பாதித்திருக்கிறோம். சந்திராயன்-3க்கு உலக நாடுகள் இந்தியாவை பார்த்து பொறாமைப்படுவது சாதாரணம்.

இந்தியா கூட்டணிக்கு பிராண்ட் அம்பாசிடர் கிடைக்காமல் லல்லு பிரசாத் யாதவை
கூட்டி வந்திருக்கிறார்கள்.மோடி வெளிநாட்டில் ஒழித்து வைத்திருக்கக்கூடிய பணம்
என்று சொன்னதே லல்லு பிரசாத்தின் பணம் தான்.

தமிழ்நாட்டில் சொன்ன பொய்யை முதலமைச்சர் மும்பையில் போய் பொய் சொல்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் இருப்பவர்கள் தான் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள். லல்லுபிரசாத், மு.க ஸ்டாலின் ஆகியோர் தங்களது மகனை முன்னிலை படுத்திகிறார்கள். மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டணி அமைத்துள்ளனர்.

சுயநலவாதிகள் அல்லது குடும்பாட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது ஊழல் செய்ய வேண்டும் என்பவர்கள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பார்க்கள்
எனவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயமாக செலவினங்களை குறைப்பது
மட்டுமல்ல.

நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீதம் அதிகமாக வாக்குகள் வாங்குவோம். சவாலுக்கு நான் தயார். சீமானை யாரும் சேர்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாக நிற்கிறார். ரெக்கார்டையும் டேட்டாவையும் புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் சொன்னபடி திட்டத்தை தருகிறார்கள் இன்னும் ஐந்து வருடத்தில் கஜானாவை காலி செய்து விடுவார்கள். கூச்சமே இல்லாமல் இந்தியாவில் பொய் கூற வேண்டும் என்றால் கோல்டு மெடல் திமுகவுக்கு தர வேண்டும். இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.