ரித்விகா ,வடிவுக்கரசி, மிதுன் அஞ்சனாதமிழ்ச்செல்வி(குழந்தை நட்சத்திரம்), ரோகினி நடிப்பில் உருவாகி உள்ளது கருவறை. என் கே ராஜராஜன் ஒளிப்பதிவில், சுராஜ் கவி படத்தொகுப்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் இ.வி கணேஷ்பாபு. இக்குறும்படத்தின் முன்னோட்ட காட்சி சென்னையில் நடைபெற்ற உலக சினிமா விழாவில் திரையிடப்பட்டது.
இதில் இயக்குநர் பிருந்தா சாரதி, ராசி அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் குறும்படத்தின் டீசர் வெளியாகி மனதை கவர்ந்தது. இதன் சிறப்பு என்னவென்றால் இக்குறும்படத்தின் இசைக்காக ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்னும் வெளி வராத குறும்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றது.
குறும்படத்தின் கதை
குழந்தையின்மையால் பல லட்சம் தம்பதிகள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட பொருளாதாரப் பின்னடைவால் பல லட்சம் பெண்களுக்கு கருக்கலைப்பு நடைபெறுகிறது. இதனை உணர்த்துகிறது கருவறை குறும்படம். கருவுற்ற மனைவியை பார்த்து நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கக் கூடாதா
என்று கேட்க அதற்கு மனைவி என்னது இதுல உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்க என்று சொல்லும்போது தியேட்டரில் கைதட்டு பலமாக கேட்கிறது. இப்படி நிறைய இடங்களை சொல்லலாம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை மனதை நெகிழ வைக்கிறது. குத்துப்பாட்டுக்கு மட்டுமே சொந்தக்காரரான ஸ்ரீகாந்த், மனதை நெகிழ வைக்கும் இசையை கொடுக்கத்திருக்கிறார். இக்குறும்படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாவின் இசை பயணம் புதிய பாதையில் பரிணமிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. இப்படி ஒரு படைப்பு எல்லோர் மனதையும் நெகிழ வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்படி கருகலைப்பு எந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தும் என்பதையும் உணர வைக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம் விரைவில் பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகிறது







