ஏற்றமிகு தமிழ்நாடே என பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்றமிகு தமிழ்நாடே என ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்குவோம் என கூறினார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று…

ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்றமிகு தமிழ்நாடே என ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்குவோம் என கூறினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஏற்றமிகு 7 திட்டங்கள்

  • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம்,
  • திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,500 ஆக உயர்வு,
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம்,
  • பல்வேறு அரசுப்பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை,
  • ரூ. 1,136 கோடியில் பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல்,
  • சென்னை மாநகர பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி,
  • தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான சிறப்பு திட்டம் ஆகிய 7 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்கவும்: ஃபிபா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி!

முதலமைச்சர் உரை

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பெயரிலான நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்வால் உணர்ச்சியும், எழுச்சியும் பெறுகிறேன். அடுத்த 10 ஆண்டுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வரும் முன்பே திருச்சி மாநாட்டில் கூறினேன். மாநாட்டில் அறிவித்த 7 இலக்குகளை நோக்கிய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

https://twitter.com/mkstalin/status/1630419442449489923

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என ஆலோசனை நடத்தினேன். மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தால் மகளிர் வாழ்க்கை மலர்ச்சியடையும் என கூறினேன். எனது கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டமானது மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும். இத்திட்டம் மூலம் ஓராண்டு காலத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான திறமைசாலிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது. தலைமுறை தலைமுறைக்கும் இத்திட்டம் பயன்படும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். மழையினால் நீர்வளம் பெருகியுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வேளாண்மை பெருகியிருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமைத்தொகை சமூக பாதுகாப்பு திட்டமாக அமைந்துள்ளது. 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டுள்ளேன் என்றார்.

அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னாவாகியிருப்பீர்கள்? என்ற கேள்விக்கு அரசியலில் தான் இருந்திருப்பேன் என கூறினேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்து, அந்த இலக்கை அடைய எந்நேரமும் உழைக்கின்றேன்.
கோட்டையிலிருந்து நிறைவேற்றும் திட்டங்கள், கடைகோடி மனிதர்களையும் சென்றடைய வேண்டும். மாநிலம் என்பது எல்லைகளால் உருவானது அல்ல. எண்ணங்களால் உருவானது. தமிழ்நாடு என்றால் இப்படித்தான் இருக்கும். ஏற்றமிகு தமிழ்நாடே என ஒவ்வொருவரும் பெருமையுடன் அழைக்கும் நிலையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.