‘பெண்கள் கல்வி கற்க விதிக்கப்படும் தடைகளை தகர்த்தெறிவோம்’

அனைவரும் விரும்பும் நல்லதோர் நாகரீக அரசாக திமுக அரசு விளங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, 114 கோடியே 21…

அனைவரும் விரும்பும் நல்லதோர் நாகரீக அரசாக திமுக அரசு விளங்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, 114 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த 40 திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 74 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைவருக்குமான சமமான வளர்ச்சி என்பது தான் திராவிட மாடல் அரசு என்று கூறிய அவர், அனைத்திலும் சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அனைவரும் விரும்பும் நல்லதோர் நாகரீக அரசாக திமுக அரசு விளங்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

அண்மைச் செய்தி: ‘நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும்,‘10 வருடங்களில் செய்ய வேண்டியதை இந்த ஒரே ஆண்டில் செய்ய முடிந்துள்ளோம்’ என்பதை நெஞ்சை நிமிர்த்தி கூறுவேன் எனவும், 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 133 புரிந்துணர்ந்து ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்றும், பெண்கள் கல்வி கற்க விதிக்கப்படும் தடைகளை தகர்த்தெறிவோம் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.