“தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்” – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

உழைப்பாளர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள உழைப்பாளர்களின் உரிமைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், இன்று (மே 1, 2025) உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் (International Workers’ Day) கொண்டாடப்படுகிறது.

உழைப்பாளர் நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  உழைப்பாளர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி; உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி, எடுத்த பணியை முடித்துக் காட்டி, உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!

உழைப்பாளர் உரிமை காப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.