முக்கியச் செய்திகள் விளையாட்டு

’எங்ககிட்ட அந்த துணிச்சல் இல்லாம போச்சு’ -தோல்விக்கு விராத் சொல்லும் காரணம்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு, தைரியமாக பேட்டிங் செய்யாததே காரணம் என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித் தார்.

டி-20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த லீக் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். வழக்கமாக அதிரடியில் ஆடும் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, கேப்டன் கோலி உட்பட அனைவரும் பதட்டத்துடனேயே ஆடினர். இதனால் அவசரத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும் ஹர்திக் 23 ரன்களும் எடுத்திருந்தனர்.

மற்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படியான ரன்களை அடிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்தற்கிடையே போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி,  தைரியமாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். அவர் கூறும்போது, இது விசித்திரமாக இருக்கிறது. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தைரியமாக செயல் படவில்லை. இதே போல் பீல்டிங்குக்கு களமிறங்கிய போது வீரர்களிடம் போதுமான துணிச்சல் இல்லை. இந்திய அணிக்காக ஆடும் போது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வீரர்களுக்கும் அப்படித்தான். அதை சமாளித்து தான் விளை யாட  வேண்டும். எங்கள் ஆட்டங்களில் எப்போதும் அதிக அழுத்தம் இருக்கும். பல வருடங்களாக நாங்கள் குழுவாக அதை முறியடித்திருக்கிறோம். கடந்த 2 போட்டிகளிலும் நாங்கள் அதை செய்யவில்லை. எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் ’ என்றார்.

Advertisement:
SHARE

Related posts

புகைப்பதை நிறுத்துவதால் இத்தனை நன்மைகளா?

Ezhilarasan

புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா!

Niruban Chakkaaravarthi

ஷேர் சாட் நிறுவனத்தை விழுங்கும் ட்விட்டர்?

Halley karthi