உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வு பற்றி கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையாகவும் சுவராஸ்யமாகவும் பதிலளித்தார். மேலும் மாணவர்கள், மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு டக் டக் என்று பதில் அளித்து பிரதமர் மோடி அசத்தினார்.
"தேர்வும் தெளிவும்" நிகழ்ச்சியில் மாணவச் செல்வங்களிடம் உரையாடிய நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், உலகில் மிகத் தொன்மையான மொழி, தமிழ் மொழி என்பதில் நாம் கர்வம் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார். #ParikshaPeCharcha pic.twitter.com/J9cgyJvcQk
— K.Annamalai (@annamalai_k) January 27, 2023
அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகவும் பழமையான மொழி எந்த நாட்டில் உள்ளதோ அந்த நாடு அதற்கு பெருமை கொள்ள வேண்டுமா? இல்லையா? நெஞ்சை நிமிர்த்தி உலகத்திடம் உலகின் மிக தொன்மையான மொழி எனது நாட்டில் உள்ளது என கூறவேண்டுமா? இல்லை? இதுகுறித்து உங்களுக்கு தெரியுமா என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அதற்கான பதிலை கூறிய பிரதமர் மோடி, நமது தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழியாகும். இவ்வளவு பெரிய கௌரவம் நமது நாட்டில் உள்ளது. இதனை நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டுமல்லவா? என மாணவர்களை பார்த்து கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் கடந்த முறை UNOவில் பேசினேன். அப்போது நான் தமிழை கற்று கொண்டு பேசினேன். ஏனெனில் நான் உலகத்திற்கு கூற விரும்பினேன். எனக்கு பெருமையாக உள்ளது. உலகின் மிக பழமையான தமிழ் மொழி, தொன்மையான தமிழ் மொழி எனது நாட்டில் உள்ளது என்பதில் எனக்கு பெருமை என பிரதமர் கூறினார்.