‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம் – பிரதமர் மோடி!

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது இன்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற காரணமாக அமைந்த போரட்டங்களுள் மிக முக்கியமானது ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம். இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 1942 ஆக, 8ம் தேதி, மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக 1942ம் ஆண்டு மகாத்மா காந்தி துவங்கிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவர்களை இன்று பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஓர் உத்வேகமாகத் திகழும்.

மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற அந்த முழக்கம் நமது விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியது. அத்துடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபடுவதற்கான நமது மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் அது வெளிப்படுத்தியது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.