புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, தமிழ்நாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை விடுவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் 25 பார்சல்களில் புனேவிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தன. இதையடுத்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பார்சல்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து தடுப்பூசி பார்சல்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். புதிதாக வந்த 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெறுகிறது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1416313552030167042
நாடு முழுவதும் தற்போது 40 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







