“காதலிக்க பெண் தேவை” – காதுகுத்து விழாவில் சிறுவர்கள் வைத்த பேனர் வைரல்!

திருத்துறைப்பூண்டி அருகே காதுகுத்து விழாவில் ‘காதலிக்க பெண் தேவை’ என வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன்…

திருத்துறைப்பூண்டி அருகே காதுகுத்து விழாவில் ‘காதலிக்க பெண் தேவை’ என வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஹரீஸ் பிரகதீஸ்வரன் என்ற சிறுவனுக்கு நேற்று அவர்களது இல்லத்தில் காதுகுத்து விழா தடபுடலாக நடைபெற்றது.

காதுகுத்து விழாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், வரவேற்றும் ஏராளமானவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு விதவிதமாக டிஜிட்டல் போர்டுகள் வைத்து அசத்தி இருந்தனர். இதில், அனைவரையும் கவரும் வகையில் சிறுவன் ஹரீஸ் பிரகதீஸ்வரனின் நண்பர்களான ஆறு சிறுவர்கள் ‘காதலிக்க பெண் தேவை’ என்று வைத்திருந்த டிஜிட்டல் போர்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதில், ஒருபுறம் நண்பனுக்கு காது குத்து என்றும்.. மறுபுறம் காதலிக்க பெண் தேவை என்றும்.. அதில் தற்சமயம் தனியாக இருக்கும் காரணத்தினால் காதலிக்கவும், செலவு செய்யவும்.. ஒரு பெண் தேவை விருப்பம் உள்ளவர்கள் வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளவும், முக்கிய குறிப்பாக தங்கை உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

இதையும் படிக்க: சென்னையில் 372 கழிப்பறைகளை பராமரிக்க மாநகராட்சி ஒப்பந்தம்

அதிகமாக மேக்கப் போட கூடாது. நான்கு ஐந்து சகோதரர் இருக்கும் பெண்களுக்கு அனுமதி கிடையாது. விண்ணப்பிக்கும் பெண்களுக்கு அதிகமாக பெண் நண்பர்கள் இருக்க வேண்டும், விவசாயம் செய்ய தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும் என அதிரடி குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன. இதனை விழாவிற்கு வந்தவர்கள் படித்து பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், காதலிக்க பெண் தேவை என்று சிறுவர்கள் வைத்த இந்த டிஜிட்டல் பேனரால் அந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுப் பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.