எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் கால்பதிக்க தீவிர முயற்ச்ச்யில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட வில்லை.
இதற்கு பின்னணியில் இந்தியாவில் ஏற்கனவே இணைய சேவையை வழங்கிவரும் அம்பானி இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவும் அதையே பிரதிபளித்தது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் தனது ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைக்க சில பணக்காரர்கள் ஸ்டார்லிங்க்கை முடக்குகின்றனர். அவர்கள் யார் என நீங்கள் யூகிக்கலாம். அது இந்திய மக்களுக்கு எதிரானது” என்று பதிவிட்டார்
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு” இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைக்கான ஒழுங்குமுறை சட்டம் பாரபட்சமின்றியும், நியாயமான முறையிலும் நடைமுறையில் உள்ளது. எலான்மஸ்க்கின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது” எனத் தெரிவித்து இருந்தது.
இந்தப் பஹிவு சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளப்பியது. எலான் மஸ்க்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகளை பதிவிட்ட்டனர்.
இதனைத்தொடர்ந்து எலான்மஸ்க் வெளியிட்ட பதில் ஒன்றில்,” ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு 165 நாடுகள் லைசென்ஸ் வழங்கி உள்ளன. இந்திய அரசின் ஒவ்வொரு சட்டம் மற்றும் வழிமுறைகளை ஐந்து ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். ஆனால், இன்னும் லைசென்ஸ் வழங்கப்படாதது ஏன்? இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானியா?,” என்று கூறினார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “எலான் மஸ்க்கை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். மற்றொரு நபரை கண்டுபிடிக்கும் வரை காத்திருங்கள்”எனக்கூறியுள்ளார். அதேபோல கமலஹாசன் வெளியிட்ட பதிவில், “மஸ்க், ஆம், எந்தவொரு கோடீஸ்வரரும் – அவர் இந்தியராகவோ அல்லது அமெரிக்கராகவோ இருந்தாலும் – ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அம்பானியின் ரிலயன்ஸ் நிறுவனம் சர்ச்சைக்கை பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் என அனைவருக்கும் ஒரே விதிமுறைகள்தான் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன; ஜியோவின் செயற்கைக்கோள் இணைய சேவைக்கே இன்னும் அனுமதி கிடைக்காமல்தான் இருக்கிறது
நாங்கள் ஒருபோதும் போட்டிக்கு அஞ்சியதில்லை; 2016ஆம் ஆண்டு ஒரு வாடிக்கையாளர்கூட இல்லாமல் தொலைத்தொடர்புத் துறையில் நுழைந்த ஜியோ, பத்தே ஆண்டுகளில் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது; மேலும் இந்திய மக்களுக்கு மலிவான டேட்டா சேவையையும் வழங்கி வருகிறது
ஸ்டார்லிங்க் உள்ளிட்ட செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களின் வருகையை நாங்கள் வரவேற்கிறோம்; அதேநேரத்தில், ஜியோ உட்பட அனைத்து நிறுவனங்களும் இந்திய சட்டங்களுக்கும் அரசின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




