தங்கம் விலையில் மாற்றமில்லை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2920 குறைந்தது. இதனிடையே, இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. ஒரு கிராம் ரூ.13,515-க்கும் ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.