நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகியுள்ளது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, “ நீலகிரி, கரூர், இராமநாதபுரம் மற்றும் கோயம்புத்தூரில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




