”இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இன்று இணைந்தார். மேலும் பாஜகவில் இருந்து பிரிந்த நிர்மல் குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் கூட்டணி தர்மத்தினை மீறி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதை கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் தினேஷ்ரோடி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

இந்நிலையில் இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கூறுகையில், பாஜகவின் பல கொள்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்.  கூட்டணியில் இருப்பதற்காக பாஜகவின் கொள்கைகளை ஏற்க முடியாது;  இபிஎஸ் உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

அண்மைச் செய்தி : எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரித்து போராட்டம்: பாஜகவினர் கைது

இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேள் கூறுகையில், முதிர்ச்சி இல்லாத அரைவேக்காடுகளின் அரசியல் இப்படித்தான் இருக்கும் தவறான வார்த்தை கையாடல்களும் உருவ பொம்மை எரித்தலும். நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பது நடந்தால் நல்லதுதான். புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை தான் நினைவுக்கு வருகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.