‘இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை என்று பெருமையுடன் சொல்லலாம்’

இந்நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள் எனவும் பிரதமரின் வருகையால் இந்த விழா பெருமை அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுமார் 100 ஆண்டுக் கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், முதல் முறையாக…

இந்நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள் எனவும் பிரதமரின் வருகையால் இந்த விழா பெருமை அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுமார் 100 ஆண்டுக் கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக 44வது செஸ் ஒலிம்பியாட்டின் பிரம்மாண்ட தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமைகளைப் பறைசாற்றும், வகையில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், சங்க காலம் தொடங்கி தற்போது வரை உள்ள தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளைக் கூறும் பதிவுகள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறுகள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் பெருமைகள், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, சிலம்பத்தின் விளக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில், காணொலிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் இடம்பெற்றிருந்தன. அவை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சர்வதேச நாட்டவர்களை வெகுவாகக் கவர்ந்தன.

https://twitter.com/news7tamil/status/1552663757544796160

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரு விளையாட்டரங்கத்திற்குப் பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் தொடக்க விழா அமைந்துள்ளதாகவும், சதுரங்க விளையாட்டு பிரதமருக்கு பிடித்தமானது எனவும் தெரிவித்தார். மேலும், குஜராத் முதலமைச்சராகப் பிரதமர் இருந்தபோது சதுரங்க திருவிழாவை அவர் நடத்தியதைக் குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கான அழைப்பிதழோடு டில்லி சென்று அழைக்கலாம் எனத் திட்டமிட்டிருந்ததாகவும், எதிர்பாராத கொரோனா தொற்றால் நேரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

https://twitter.com/news7tamil/status/1552664485512417280

மேலும், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, பிரதமர் தொலைபோசியில் அழைத்துப் பேசியதாகத் தெரிவித்த அவர், தான் அவசியம் விழாவில் கலந்து கொள்வதாகத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் ரஷ்ய நாட்டில்தான் நடப்பதாகச் சொல்லப்பட்டது. சில காரணங்களால், அது நடக்காமல் போனதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு வருமானால் தமிழ்நாட்டிற்கு அந்த வாய்ப்பு வர வேண்டும் தான் அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘1,712 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!’

அதன்படி, 18 மாதங்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை, நான்கே மாதங்களில் தமிழ்நாடு சிறப்பாகச் செய்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அமைச்சர் மெய்ய நாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளையும் வாழ்த்துவதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற வாய்ப்புகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் எனப் பிரதமருக்குக் கோரிக்கை விடுத்தார்.

https://twitter.com/news7tamil/status/1552669459055185931

இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைநகரம் சென்னை என்று பெருமையுடன் சொல்லலாம் எனவும், இந்நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள், பிரதமரின் வருகையால் இந்த விழா பெருமை அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணா ஒவ்வொருவரையும் தம்பி என அழைப்பார் எனவும், அதனால்தான் செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ எனப் பெயர் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்த அவர், போர் மரபிற்கும் தமிழர்க்கும் தொடர்பிருப்பதை கீழடி சொல்வதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.