மணிப்பூருக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறோம் – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மணிப்பூரில் தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்திவாசியப் பொருட்களை அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கை,…

மணிப்பூரில் தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்திவாசியப் பொருட்களை அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங்குக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் மணிப்பூரில் வாழும் தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தார்ப்பாலின் விரிப்புகள், மருந்துகள், பால் பவுடர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரியப்படுத்துமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.