வாஜ்பாயின் சேவையால் நான் ஈர்க்கப்பட்டேன் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97வது பிறந்த தினத்தில் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
1924 டிச.25ல் பிறந்த வாஜ்பாய் இந்தியாவின் பிரதமாராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். 1998ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை இவரது ஆட்சிக்காலத்தில்தான் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, வாஜ்பாயின் சேவையால் நான் ஈர்க்கப்பட்டேன் என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், வாஜ்பாயின் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மில்லியன் கணக்கான இந்தியர்களை நேர்மறையாக பாதித்தன என்றும் கூறியுள்ளார்.
https://twitter.com/narendramodi/status/1474561088171560964
பிரதமரைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தி மொழிப் புலமையால், எழுத்தாளரகவும் பத்திரிகையாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த வாஜ்பாய் , ட்வென்டி-ஒன் போயம்ஸ் ’, ‘க்யா கோயா க்யா பாயா உள்ளிட்ட நூல்கைளயும் எழுதியிருந்தார்.







