பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்ததால், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த நன்னீர் ஏரி இயற்கையாக உருவானது ஆகும். மேலும் இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீர், மலை பகுதி வழியாக பெரியகுளம் சென்றடையும்.
பெரியகுளம் நகராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான சோத்துப்பாறை அணையில் நீர் அளவு மிகவும் குறைந்துள்ளதால் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: