சென்னை வியாசர்பாடி தூய ஆரோக்கிய அன்னை திருச்சபை திருவிழா முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனி ஏராளமான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்றனர்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அமைந்துள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தளத்தில் 58 ஆம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த பத்து நாட்களாக திருப்பலி, தேர் வீதி உலா, அன்னதானம் நடைபெற்று வந்தது. இந் நிலையில் முக்கிய நிகழ்வாக தேர்பவனி நேற்று நடைபெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தேர் ஊர்வலமாக சென்றது. முன்னதாக மாதவின் கொடி ஆராதனை முழங்க இறக்கப்பட்டது.இதில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் திரளாக கலந்துகொண்டனர் அப்போது பலூன்களை பறக்கவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.






