சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை போற்றும் வகையில் அவர்கள் வாழ்ந்த இல்லங்களை பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் பராமரித்து சிறப்பாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வ.உ.சி கொள்ளு பேத்தி வலியுறுத்தி உள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் 151 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டியில் வ.உ.சி யின் கொள்ளுப் பேத்தி செல்வி அவரது இல்லத்தில் வ.உ.சியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வ.உ.சி யின் பிறந்தநாள் விழாவை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தார். குடியரசு தின விழாவில் கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனார் மற்றும் தமிழக தியாகிகளை வரலாறு அடங்கிய வாகன ஊர்தியை மத்திய அரசு நிராகரித்த போதிலும், தமிழக அரசு குடியரசு தின விழாவில் கொண்டாட இடம் பெறச் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்.
கடந்த சில வருடங்களாக பார்க்கும் பொழுது தென்னக தியாகிகளின் தியாகங்கள் மறுக்கப்படுகிறது,மறைக்கப்படுகிறது,மாற்றப்படுகிறது,புறக்கணிக்கப்படுகிறது. மேலும் வ.உ.சி யின் வெண்கல சிலையை பாராளுமன்றத்தில் நிறுவவும்,நுழை வாயிலில் வ.உ.சி பெயர் சூட்டவும்,செப் 5 வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்.சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகங்களை போற்றும் வகையில் அவர்கள் வாழ்ந்த இல்லங்களில் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் பராமரிக்கும் வகையில் சிறப்பாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.







