முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் இல்லை, தமிழ்நாடு மாடல் – சீமான் தாக்கு

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் திராவிட மாடல் இல்லை என்றும் தமிழ்நாடு மாடல் என்றும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்தி, துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். ராகுல்காந்திக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது என குற்றம்சாட்டிய அவர், கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கஞ்சா, குட்கா, ஹெராயின், போன்றவை முருகன் ஆணையாக போதை பொருள்கள் என ஒத்துக் கொள்கிறேன் என தெரிவித்த சீமான், ஆனால் டாஸ்மார்க் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ் நாட்டு மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்.

 

விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா பேசி வருவதால், அவருக்கு எனது நன்றி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆடியோ வெளியிட்டு மனச்சான்றோடு பேசிய திமுக கவுன்சிலருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சீமான் கூறினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது-அமைச்சர் மெய்யநாதன்

G SaravanaKumar

அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!

Web Editor

ஊரடங்கு நீட்டிப்பு: தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தளர்வு!

Gayathri Venkatesan