அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒற்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







