பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.

பஞ்சாப், மற்றும் உத்தர பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டசபைத்…

பஞ்சாப், மற்றும் உத்தர பிரதேசத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்ட சபை இடங்களுக்கான தேர்தலானது இன்று காலையில் தொடங்கி வாக்குப் பதிவு நடந்து வருகிறது. ஆளும் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆம் ஆதமி கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அகாலிதளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலைச் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாகத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தலை நடத்தி முடித்திருந்தது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்றைய தேர்தலில் 2.15 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவிருக்கிறது. மேலும் மதியம் 1 மணி நிலவரப்படி சுமார் 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.