“சர்வாதிகாரத்திற்கு எதிராக வாக்களித்தேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் பதிவு!

சர்வாதிகாரம்,  வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களித்தேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

சர்வாதிகாரம்,  வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களித்தேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது.

6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 25) நடைபெற்று வருகிறது.  7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதன்படி,  6ம் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதாவுடன் டெல்லி சிவில் லைன்ஸ் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.  இதனையடுத்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது,  “நான் சர்வாதிகாரம்,  வேலையின்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக வாக்களித்தேன்.  நீங்களும் சென்று வாக்களிக்க வேண்டும்.  எனது தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று வாக்களித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.