பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் ரத்தினத்திற்கு விருது வழங்கி கௌரவித்த தன்னார்வலர்கள்!

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்,  அதிசய டாக்டர் ரத்தினத்திற்கு தன்னார்வலர்கள் விருது வழங்கி கௌரவித்தனர் . தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் ரத்தக்…

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்,  அதிசய டாக்டர் ரத்தினத்திற்கு தன்னார்வலர்கள் விருது வழங்கி கௌரவித்தனர் .

தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் தனியார் திருமண
மண்டபத்தில் ரத்தக் கொடையாளர்கள் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  மேலும் உயிழ் காக்கும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  தமிழ்நாடு,  பாண்டிச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தொண்டுள்ளத்துடன் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள்,  ரத்தக் கொடையாளர்கள்,  ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.  இதில் இதுவரை பத்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வரும் 88 வயது டாக்டர் ரத்தினத்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  அப்போது அரங்கத்தில் உள்ள அனைவரும் கைதட்டி ஆரவாரத்தோடு அவரை மகிழ்வித்தனர்.

டாக்டர் ரத்தினம் ொ1957 ஆம் ஆண்டு முதல் தனது மருத்துவ பணியை தொடங்கியுள்ளார். தன் பணியை தொடங்கும் போது இவர் 2 ரூபாய் கட்டணம் பெற்றுள்ளார்.  அதன்பின் 1997 ஆம் ஆண்டிலிருந்து 5 ரூபாய் கட்டணம் வாங்கியுள்ளார்.  பின் 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 10 ரூபாய் கட்டணமாக வசூலித்து வருகிறார்.  இவர் பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் எனவும் அடைமொழியுடன் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.