9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடல்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் மூடப்படுவதாக
பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், உதவி
பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
தொழிற்கல்வி பாடத்தை முந்தைய அரசு அறிமுகப்படுத்தியது. மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா நிதியுதவி மூலம் மாணவர்களுக்கு Tailoring, Beautician, Fashion Designing, Agricultural Engineering, General Mechanism உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் 9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் கல்வியாண்டு ( 2022-23 ) முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
தொழிற்கல்வி பாடம் கிடையாது என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு முடித்து, வரும் கல்வியாண்டில் 10-ஆம்
வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்
என்றும், வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு
தொழிற்கல்வி பாடம் நடத்தப்படாது என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தொழிற்கல்வி பாடம் மூடப்படுவதால் அதை நடத்தி வரும் 200-க்கும் அதிகமான
தற்காலிக ஆசிரியர்கள் பணி இழப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.