வித்தியாசமான கெட்டப்பில் விஷால்; மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.விஷால் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘லத்தி’ எனும் படத்தில் நடிப்புள்ளார்.…

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார்.விஷால் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் ‘லத்தி’ எனும் படத்தில் நடிப்புள்ளார். ‘ராணா புரொடக்ஷன்’ என்ற நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.இந்தப்படத்தைத் தொடர்ந்து விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டர் விஷாலின் தோற்றதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் விஷால் நிறைய முடி மற்றும் தாடியோடு கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பும் செய்யும் இப்படத்திற்கு தினேஷ் பாபா பாஸ்கர் மற்றும் அசார் இணைந்து நடனம் அமைத்துள்ளனர். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பைப் படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.