முக்கியச் செய்திகள் இந்தியா

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜினாமா!

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இவரது ராஜினாமா கடிதம் முதல்வர் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பகத்தில் பதிவிட்டுள்ளார். கேரள அரசின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மேலளராக அமைச்சர் ஜலீலின் உறவினர் ஹதீப் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நமப்வர் மாதம் 2018-ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த லோக் ஆயுக்தா, அமைச்சர் கே.டி ஜலீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் பினராயி விஜயனிடம் வலியுறுத்தியது. இந்நிலையில் லோக் ஆயுக்தாவின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கே.டி ஜலீல் நேற்று மேல் முறையீடு செய்தார். ஆனால் இன்று அவர் பதவி விலகி உள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

திமுக சட்டமன்ற குழு தலைவராக மு.க ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு!

Karthick

பதவி சுகத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்த கட்சி திமுக: துணை முதல்வர் ஓ.பி.எஸ்

Saravana

விராட் கோலி அதிரடி; இங்கிலாந்துக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Saravana Kumar