ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை சாய் பல்லவி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சாய் பல்லவி, தெலுங்கு நடிகர் ராணாவுடன் சேர்ந்து நடித்த ‘விரத பர்வம்’ தெலுங்குப் படம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய சாய்பல்லவி, நான் நடுநிலையான குடும்ப சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இடதுசாரி, வலதுசாரி குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதில் யார் சரி, யார் தவறு என்று என்னால் கூற முடியாது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பார்த்தேன். அதில் காஷ்மீரி பண்டிட்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதைக் காண்பித்தார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா காலத்தில் பசுவை கொண்டுச் சென்ற நபர் ஒருவரை முஸ்லிம் என சந்தேகப்பட்டு அடித்துக் கொன்றனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கோஷங்களை எழுப்பினர். காஷ்மீரில் நடந்ததற்கும், இதற்கும் என்ன வித்தியாசம். நான் நடுநிலையாக உள்ளனே. அவ்வாறுதான் நான் வளர்க்கப்பட்டேன். ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
-ம.பவித்ரா