முக்கியச் செய்திகள் விளையாட்டு

வெல்லுமா விராத் படை? வெளியேறுதல் சுற்றில் கொல்கத்தாவுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில், ஐ.பி.எல். தொடரில், லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும்.

 

விராத் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, லீக் சுற்றில் 18 புள்ளிகளுடன் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியில் கேப்டன் விராத், தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், மேக்ஸ்வெல் சிறப்பான பாஃர்மில் இருக்கின்றனர். பந்துவீச்சில், சாஹல், முகமது சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் சவால் கொடுக்கிறார்கள். கேப்டனாக கோலி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடர் இது. இதுவரை பெங்களூரு அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறை அதை வெல்லப் போராடும்.

மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணியில் வெங்கடேஷ் அய்யர், திரிபாதி, சுப்மான் கில், நிதிஷ் ராணா ஆகியோர் அதிரடி காட்டி வருகிறார்கள். பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி சிறப்பாக செயல்படுகின்றனர். காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சில ஆட்டங்களில் ஆடாத ஆந்த்ரே ரஸல் இந்த ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

சார்ஜாவில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இரு அணிகளும் வெற்றிக்கு வரிந்து கட்டும் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement:
SHARE

Related posts

சமூக வலைதளங்கள் மூலம் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்!

Jeba Arul Robinson

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

Jeba Arul Robinson

7 தமிழர்களை விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை!