முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வு; 7 மொழிகளில் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் குழு அறிக்கை 7 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கிராமபுற மாணவர்களின் கனவை சிதைப்பதாக இருக்கிறது என்றும் இது மாணவர்களுக்கு சுமையாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் தேர்வு உருவாக்கும் பயம், பெற்றோர் மற்றும் சுற்றத்தாரின் எதிர்பார்ப்புக்கு அஞ்சி பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தார். இக்குழு தயாரித்த 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாநிலம் முழுவதும் 5 கோடியே 3 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசின் சார்பில் மட்டும் 5 கோடியே 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், ஏகே ராஜன் குழு அறிக்கையை, ஏழு மொழிகளில் மொழிபெயர்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து பேட்டியளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாட்டில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது எனவும், 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு காவல் அதிகாரி டெரிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை!

Vandhana

”ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

”போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது”- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Jayapriya