முக்கியச் செய்திகள் விளையாட்டு

’பேட்டிங்ல ரொம்ப யோசிக்க கூடாது..’ வெற்றிக்கு பின் தோனி கூல்

பேட்டிங் செய்யும் போது அதிகம் யோசிக்கக் கூடாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஐ.பி.எல். தொடரில், லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று மோதின.

முதலில் ஆடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் ருதுராஜ் 70 ரன்களும் ராபின் உத்தப்பா 63 ரன்களும் கடைசி கட்டத்தில் தோனி 6 பந்துகளில் 18 ரன்களும் எடுத்தனர்.

வெற்றிக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ’இந்தப் போட்டியில் டெல்லி அணி சிறப்பாக பந்துவீசியது. அவர்கள் நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். அதனால், எங்களுக்கு கொஞ்சம் கடினம் என்று தெரியும். நான் வலைப் பயிற்சியில் நன்றாக பேட்டிங் செய்தேன்.

அதனால் கடைசி கட்டத்தில், அதிகம் யோசிக்காமல் ஆடினேன். பேட்டிங் செய்யும் போது அதிகமாக யோசித்தால் உங்கள் திட்டங்களை குழப்பமடையும். ராபின் உத்தப்பா மூன்றாவது இடத்தில் சிறப்பாக ஆடினார். ருதுராஜ் கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறார். கடந்த சீசனில் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த முறை வலுவாக திரும்பி வந்திருக்கிறோம்’ என்றார்.

……..

Advertisement:
SHARE

Related posts

இந்தோனேசியாவில் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டிபிடிப்பு!

Saravana

மு.க ஸ்டாலினுக்குப் பன்னீர் செல்வம் வாழ்த்து!

Halley karthi

ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

Ezhilarasan