டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரோகித் சர்மாவை முறியடித்து விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.
நேற்று நடந்த ஆசிய கோப்பை டி-20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விராட் கோலிக்கு சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிக்கு இது 32 வது அரைசதம் ஆகும். இதுவரை அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனை பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில், அந்த சாதனையை விராத் கோலி முறியடித்துள்ளார்.
அதன்படி, டி-20 அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் விராத் கோலி 32 ரன்கள் எடுத்து முதல் இடத்திலும், ரோகித் ஷர்மா 31 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்