நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாக சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும், தனக்கு அழுத்தம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளியிட நேரிடும் என்றும் அந்த மனுவில் அவர் எச்சரித்திருந்தார். விஜய் மீது அவரது மனைவி சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.
இந்த நிலையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சசிகலா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வரும் ஜூன் 15-ம் தேதி நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.







