விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.  நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான விநாயக சதுர்த்தி விழா வரும் 31ந்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர்…

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான விநாயக சதுர்த்தி விழா வரும் 31ந்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபட்ட விநாயகர் சிலைகள் பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பார்கள்.

அவ்வாறு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி

1) களிமண்ணாமல் செய்த மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்,

2) மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

3) சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோலை பயன்படுத்தலாம்.

4) சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.

5) விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.