மூத்த குடிமக்களை இளைஞர்களுடன் இணைக்கும் ஸ்டார்ட்அப்-டாடா குழுமம் முதலீடு

மூத்த குடிமக்களை இளைஞர்களுடன் இணைக்கும் யோசனையுடன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் குழுமம் முதலீடு செய்துள்ளது. நமது நாட்டில் சுமார் 140 கோடி மக்கள் உள்ளனர். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும்…

மூத்த குடிமக்களை இளைஞர்களுடன் இணைக்கும் யோசனையுடன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் குழுமம் முதலீடு செய்துள்ளது.

நமது நாட்டில் சுமார் 140 கோடி மக்கள் உள்ளனர். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள். அதேநேரம், 25 வயதுக்குள்பட்ட இளைஞர்களும் அனைத்து வீடுகளிலும் உள்ளனர். சுமார் 1.5 கோடி மூத்த குடிமக்கள் வீடுகளில் தனிமையில் வாழ்கின்றனர்.

அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் தங்கிவிடுவதால் மூத்த குடிமக்கள் தனிமையில் தவிக்கும் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல்வேறு சவால்களை அளிக்கிறது.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கு ஒரு சேவையாக தோழமையை வழங்கும் குட்ஃபெல்லோஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நோக்கத்திற்காக டாடா குழுவும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப்பை சாந்தனு நாயுடு என்ற 30 வயது இளைஞர் தொடங்கினார்.

இந்த ஸ்டார்ட்அப்பை 30 வயதான சாந்தனு நாயுடு தொடங்கியுள்ளார். அவர் ரத்தன் டாடாவின் அலுவலகம் மற்றும் அவரது ஸ்டார்ட்அப் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோவை பொது மேலாளராக இருந்து நிர்வகிக்கிறார்.

நாயுடு குழுமத்தின் மாபெரும் தொண்டு நிறுவனமான டாடா அறக்கட்டளையின் தலைவராகவும் இவர் இருந்து வருகிறார்.

தோழமைக்காக நீங்கள் தனியாக நேரத்தை செலவிடும் வரை தனிமையாக இருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியாது என்று மும்பையில் இந்த ஸ்டார்ட்அப்பின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் பங்கேற்றபோது டாடா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.