வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு வளர்பிறை சதுர்த்தி தினமான இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொது இடங்களில் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வீடுகளிலும் பல வடிவங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் விநாயர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. தங்கத்திலான கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். நாக்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அங்கு வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அங்குள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட இந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
-ம.பவித்ரா










