விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உட்பட 10 கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர் .
ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த மான்ராஜ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இத்தொகுதியில் உள்ள 10 முக்கியமான பிரச்சனைகள்:
- ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அழகர் அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மம்சாபுரம் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணன்கோவில் பகுதியில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூமாப்பட்டி அழகர் மகன் ஓடையை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வத்திராயிருப்பில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








